இரண்டுமே எங்களின் இலக்குதான்... இராணுவ தளபதி பேட்டி.!!
indian army general speech about china border problem
இந்தியாவிற்கு அண்டை நாடுகளான சீனா மற்றும் பாக்கிஸ்தான் எல்லையில் பதற்றம் இருப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சீன இராணுவம் ஒருபுறம்., பாக்கிஸ்தான் இராணுவம் மற்றும் பாக்கிஸ்தான் நாட்டினை சார்ந்த பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது.
அதிகளவு பதற்றம் உள்ள பகுதியாக பாக்கிஸ்தான் எல்லைப்புற பகுதி கருதப்படும் வேளையில்., சீன எல்லையின் மீது அதிகளவிலான கவனம் செலுத்தப்படும் என்று இராணுவ தளபதியான எம்.எம்.நரவானே தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய நாட்டின் புதிய இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் எம்.எம்.நரவானே., இந்திய இராணுவத்துடைய 28 ஆவது தளபதியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியை செலுத்தினார்.
இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட எம்.எம்.நரவானே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பெட்டியில்., சீனாவின் எல்லைப்பகுதியில் அதிக கவனமானது செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
எவ்வித சூழ்நிலையிலும் நாட்டினை பாதுகாக்கும் பணியில் இராணுவத்தை தயார் செய்து வைப்பது நமது திட்டம்.. எனது பதவிக்காலத்தில் இராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் மீறப்படாமல் இருக்க அறிவுத்தப்பட்டு., பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் இருந்தாலும்., இனி சீன எல்லையும் இந்திய இராணுவத்தின் கண்காணிப்பு அதிகளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
indian army general speech about china border problem