நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்: கேரளா காங்கிரசார் குறித்து ராகுல் காந்தி பதிவு!
We are united: Rahul Gandhi on Kerala Congress
கேரளாவில் தங்கள் முன் உள்ள சவாலுக்காக அனைவரும் ஒற்றுமையாக நிற்கின்றனர் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலதில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு முறை நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றிபெற முடியாத காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியாவது வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என முடிவு செய்து வேலையை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூரின் செயலால் அம்மாநில காங்கிரசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.அவர் சமீபத்தில் ஆளுங்கட்சியை பாராட்டி பேசியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு நடத்தியதற்காக பிரதமர் மோடியையும் பாராட்டியுள்ளார். இதனால் கேரள காங்கிரசார் என்ன செய்வதறியாது திகைத்தனர்.
இந்தநிலையில் , சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது இதில் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் தலைவர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது என்றும் கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக நிற்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தங்கள் முன் உள்ள சவாலுக்காக அனைவரும் ஒற்றுமையாக நிற்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.
English Summary
We are united: Rahul Gandhi on Kerala Congress