இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா? காரணம் இதுவா? - Seithipunal
Seithipunal


இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ்  நிறுவனத்தின் இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இருவரும் பதிவியை ராஜினாமா செய்துள்ளனர்.  1968ல் தந்தை நாராயணசாமி இறந்த பிறகு சீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். 75 ஆண்டுகளுக்கும் மேலான  பாரம்பரியம் கொண்டது இந்த நிறுவனம்.

இந்தியா சிமெண்ட்ஸ்  நிறுவனத்தின் 55.5 சதவிகித பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்  நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவின்படி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சீனிவாசன், முழு நேர இயக்குநராக இருந்த ரூபா குருநாத் பதிவி விலகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian cements md resigned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->