பெல்ஜியம் இளவரசி மற்றும் துணை பிரதமருடன் ஆலோசனை நடத்திய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட் அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் 360 தொழில் நிறுவனங்களின் தலைவர்களை அடங்கலாகி உயர்நிலை பொருளாதாரக் குழுவினரும் வந்துள்ளனர். 

பெல்ஜியம் மற்றும் இந்தியா இடையில் இருதரப்பு துாதரக உறவுகளைத் தவிர, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது, நம் நாட்டில் முதலீடுகள் செய்வது, பல துறைகளில் இணைந்து செயல்படுவது போன்றவை குறித்து இந்த பயணத்தில் ஆலோசனை நடத்தப்படள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட், பெல்ஜியம் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான மேக்சிம் பிரிவாட் ஆகியோருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டம் குறித்து, ஜெய்சங்கர் கூறியதாவது:
இந்தியா, பெல்ஜியம் இடையேயான உறவு சீராக வளர்ந்து வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், ஐரோப்பிய நாடுகளிலேயே பெல்ஜியத்தில் தான் இந்தியாவின் முதல் துாதரகம் அமைந்தது. நம் நாடுகளுக்கு இடையே வரலாற்று தொடர்புள்ளது. செமி கண்டக்டர், பசுமை எரிசக்தி, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும்.'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian External Affairs Minister holds talks with Belgian Princess and Deputy Prime Minister


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->