''இந்திய மாணவர்களின் திறமையால் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன.'' ஜனாதிபதி திரவுபதி முர்மு..! - Seithipunal
Seithipunal


நம்முடைய நாட்டின் பல உயர் கல்வி மையங்களுக்கு, உலகளாவிய தர அடையாளத்திற்கான மதிப்பு உள்ளது. என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லி ராஷ்டிரபதி பவனில் 02 நாள் நடைபெறும் 2024-2025 ஆண்டுக்கான பார்வையாளர்கள் மாநாட்டை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்து பேசும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன், அவர் நிகழ்வின் தொடக்க உரையில் பேசும்போது, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கான அளவும், அதன் கல்வி முறையில் உள்ள தரத்தின் வழியே பிரதிபலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வியுடன் ஆராய்ச்சிக்கு நிறைய கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக தேசிய ஆராய்ச்சி நிதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாகவும், இந்த முக்கியம் வாய்ந்த திட்ட தொடக்கத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி, ஆராய்ச்சிபணியை உயர் கல்வி அமைப்புகள் ஊக்குவிக்கும் என்று தன்னுடைய நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசுய ஜனாதிபதி முர்மு,  இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய திறமையால், உலக அளவில் முன்னணியில் உள்ள கல்வி மையங்களை வளப்படுத்தி அவற்றை வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக மாற்றியுள்ளனர் என்று கூறியுள்ளார்.  இதனால், திறமையான இந்திய மாணவர்களால் பல நாடுகள் வளர்ச்சி அடைந்த பொருளாதார நிலையை அடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், (மாணவர்கள்) அவர்களுடைய திறமையை நம்முடைய நாட்டிலும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நம்முடைய நாட்டின் பல உயர் கல்வி மையங்களுக்கு உலகளாவிய தர அடையாளத்திற்கான மதிப்புள்ளது. இந்த மையங்களில் படித்த மாணவர்களுக்கு, உலக அளவில் சிறந்த மையங்கள் மற்றும் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

President Droupadi Murmu inaugurates Visitors Conference in New Delhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->