இலங்கைக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணம் செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.!
indian external affairs minister jai sangar two days travel to sri langa
இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். இவர் இலங்கைக்கு இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக செல்கிறார். அவர் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே அறிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
"இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் ஒரு வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது" என்று அவர் பேசினார்.
அங்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தனா மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்திக்கிறார்.
இதையடுத்து, சர்வதேச பண நிதியம், இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் தொகையை கடனாக வழங்குவதற்கு, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உத்தரவாதத்தை கேட்கிறது.
இதற்கிடையே, இந்திய வெளியுறவு அமைச்சரின் இந்த வருகையானது கடன் உத்தரவாதத்தில் வெற்றிகரமான முடிவெடுப்பதற்கு உதவும் என்று ஒட்டுமொத்த இலங்கையும் எதிர்பார்க்கிறது.
இதற்கு முன்னதாக இந்தியா, இலங்கையின் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில் நிதி உதவி வழங்கி உள்ளது. தற்போது பொருளாதார மந்தநிலை நீடித்து வரும் நிலையில் சர்வதேச பண நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் தொகையை பெறுவதிலும் இந்தியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று இலங்கை நம்புகிறது.
English Summary
indian external affairs minister jai sangar two days travel to sri langa