பொங்கல் திருவிழா - அவனியாபுரத்தில் அதிரடி காட்டும் காளைகள்.! - Seithipunal
Seithipunal


இன்று தைப்பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறுபுறம் இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 

இதனை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த ஜலிக்கட்டு விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றுத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி விண்ணப்பித்த 1,100 காளைகள் உரிமையாளர்களால் இன்று 5 மணி முதல் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்டன. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இதேபோன்று காளைகள் பிடிக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காலத்தில் இறங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு நேரத்தில் பாதுகாப்பிற்காக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikattu start in avaniyapuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->