இந்திய வெளியுறவு அமைச்சர் ரஷ்யா பயணம்.! இருதரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை.!
Indian Foreign Minister visits Russia for talks to improve bilateral relations
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயன போர் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார்.
இதையடுத்து ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்ததாவது,
இந்த ஆண்டில் இது எங்களது ஐந்தாவது சந்திப்பு. எங்கள் பேச்சுக்கள் ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் குறிப்பிட்ட பிராந்திய பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
சர்வதேச நிலைமையை பொறுத்தவரையில், கடந்த சில ஆண்டுகள் நிலவிய கொரோனா பெருந்தொற்று, நிதி அழுத்தங்கள் மற்றும் வர்த்தக சிக்கல்கள் அனைத்தும் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் உக்ரைன்-ரஷ்யா மோதலால் ஏற்பட்டுள்ள விளைவுகளை தான் இப்போது பார்க்கிறோம். உக்ரைன் -ரஷியா இடையேயான மோதலை பொறுத்தவரையில், பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் கடுமையாக வலியுறுத்துகிறது.
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலிமையானது. ரஷ்யாவுடனான இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Indian Foreign Minister visits Russia for talks to improve bilateral relations