கடலில் சிக்கிய தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா கடற்கரைக்கு அப்பால் சட்டவிரோத டீசல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட குழுவுடன் மீன்பிடி படகை இந்தியக் கடலோரக் காவல்படை கைப்பற்றியது. பின்னர் இந்த மீன்பிடி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத 5 டன் டீசலும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் பிடிபட்ட படகை மும்பை துறைமுகத்திற்கு கொண்டுச் சென்றனர். அங்கு காவல்துறையினர், சுங்கத்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் இந்தக் குழுவினர் கடலில் மீனவர்களுக்கு 5,000 லிட்டர் எரிபொருளை விற்றது தெரியவந்தது.

நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், கடலோர எல்லைகளைப் பாதுகாப்பதிலும் உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian navy seized banned drugs in maharastra


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->