வெளிநடுகளில் 8,278 இந்தியர்கள் கைதிகளாக இருப்பதாக மத்திய அரசு தகவல்.!
Indian prisoners in foreign
வெளிநாடுகளில் 8,278 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 8,278 இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ளனர் என்றும், அவர்களில் 156 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், வலுவான தனியுரிமைச் சட்டங்கள் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன. அதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபர்கள் அத்தகைய தகவலை வெளிப்படுத்த சம்மதித்தால் தவிர, கைதிகள் பற்றிய தகவல்களை உள்ளூர் அதிகாரிகள் பகிர்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள்கூட பொதுவாக சிறையில் இருக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதில்லை என்றும், வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. அவர்களை திருப்பி அனுப்பும் நடைமுறை தொடர்பாக, இந்திய தூதரகங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Indian prisoners in foreign