ரயிலில் இனி லோயர் பெர்த் பிரச்சனைக்கு தீர்வு.! புதிய வழிவகை.!
indian railway makes a great step to help out senior citizens and elderly women
ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 49 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவின்போது அவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் லோயர் பெர்த் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்
நாட்டில் எவ்வளவு ரயில்கள் இயக்கப்படுகின்றன ரயில்களில் மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தூத்துக்குடி மக்கள் மற்றும் பெண்களுக்கான அமரும் வசதி இது தொடர்பான விஷயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி தீபக் மற்றும் வீராசாமி போன்ற அதிகாரிகள் பாராளுமன்றத்தில் கேள்வியை எழுப்பினர்.
இதுகுறித்து பதிலளித்த ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் நம் நாட்டில் 2032 எக்ஸ்பிரஸ் ரயில்களும் 2687 பயணிகள் ரயில்கள் என மொத்தம் 10,378 ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை 20.3.2020 அன்று திரும்ப பெறப்பட்டது. 2019 மற்றும் இருபதாம் ஆண்டில் ரயில்வே துறையில் ஏற்பட்ட 1,667 கோடி ரூபாய் நஷ்டத்தை அடுத்து மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை திரும்பப் பெற்றதாக தெரிவித்தார்.
மேலும் ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 49 வயதிற்கு அதிகமான பெண்களுக்கு அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் லோயர் பெர்த் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மூன்றடுக்கு ஏசி மற்றும் இரண்டடுக்கு ஏசி ஆகிய அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
English Summary
indian railway makes a great step to help out senior citizens and elderly women