ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டமில்லை! மத்திய அரசு விளக்கம்.!
Indian Railways private
இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும், ரயில்வே வாரியாம் தனியார் மயமாக்கப்படுவதாக வரும் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளின் கற்பனையே என்றும் தெரிவித்தார்.
மேலும் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது நிறுத்தப்படவில்லை என்றும், 1 லட்சத்து 14 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.