ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பணயக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்ட இந்திய மாலுமிகள் விடுவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கொடி பொருத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலை, கடந்த 3 மாதங்கள முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

மேலும், இந்த கப்பலில் இருந்த வெளிநாட்டினர் உட்பட 7 இந்திய மாலுமிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக, வெளிநாட்டினர் மற்றும் இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 14 பேரும் மஸ்கட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஓமன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அல்புசைதி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு நன்றி  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian sailors held hostage by Houthi rebels


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->