இந்திய - வங்காளதேசம் குழாய் வழி எரிபொருள் விநியோகம் - அடுத்த மாதம் முதல் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு இடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள அசாம் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தையிடல் முனையத்திலிருந்து, வங்காளதேசம் பர்பதிபூரில் உள்ள வங்காளதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் வழியாக எரிபொருள் எடுத்துச்செல்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக 130 கி.மீ. தொலைவில் இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இடையே ரூ.377.08 கோடியில் குழாய்வழி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிதியுதவியைக் கொண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் 12-ந் தேதி முடிவடைந்தது. 

இந்நிலையில், இந்த குழாய் வழி எரிபொருள் வினியோக திட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடங்கி வைப்பதற்கு முடிவு செய்திருப்பதாக நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indo bengal pipeline start from next month


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->