கிசான் திட்டத்தில் விவாசியிகளிக்கு ரூ.12 ஆயிரம்? வெளியான முக்கிய தகவல்.!!
info 12 thousand rupees for farmers in Kisan scheme
வரும் ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் இடம் பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 6 தவணைகளாக அல்லது மாதம் ரூ.1,000 வீதம் 12 தவணைகளாக செலுத்தப்படலாம். இதுதவிர விவாசயிகளுக்கு அதிக உரம் மற்றும் இடுபொருள் விலைகளின் பாதிப்பில் இருந்து காக்கவும், மானியத்தை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக டெல்லி வற்றங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
info 12 thousand rupees for farmers in Kisan scheme