பாரத் என பெயர் மாறுகிறதா இந்தியா? வெளியான பரபரப்பு தகவல்!
Info Centralgovt going to India renamed as Bharat
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி குடியரசு தலைவர் மாளிகை வழங்கும் விருந்து நிகழ்ச்சிக்காக அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு தற்போது ஒரு நாடு ஒரு தேர்தலுக்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்தியா என்ற பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு எடுத்து இந்த அழைப்புகளை அனுப்பியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டியுள்ள நிலையில் தற்போது இந்தியாவிற்கே பாரத் என பெயர் சூட்டுவது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வரும் நிலையில் தற்போது குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது எதிர்வரும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றுவதற்கான சட்டம் முன்வடிவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Info Centralgovt going to India renamed as Bharat