பகீர் தகவல்... பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றதா அரசியல் கட்சி.!?
Info political parties got funds from Pakistan company
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திர விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் தேர்தல் பத்திரத்தை நன்கொடையாக பெற்றுள்ளன.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள் நிதி உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புல்வாமா தாக்குதலின் 40 crpf வீரர்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த சில தினங்களில் மே மாதம் 18ஆம் தேதி கராச்சியில் உள்ள hub power company என்ற நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பத்தின மூலம் நன்கொடை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் hub power company என்ற பெயரில் டெல்லியில் கடந்த 2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிறுவனமும் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மனுஷ் என்பவர் நிர்வாக மேலாளராக இருக்கும் இந்த நிறுவனத்தின் மூலமே நன்கொடை வழங்கப்பட்டதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் எது உண்மை என்பது விசாரணைக்கு பின்பே தெரியவரும்.
English Summary
Info political parties got funds from Pakistan company