இந்தியாவில் இணையதளம் திறந்த வெளியில் உள்ளது - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேச்சு.!
internet open in india central minister rajiv chandrasekar speech
நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர்தெரிவித்ததாவது:-
கடந்த 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92 சதவீத மொபைல் போன்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத மொபைல் போன்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டவை.
தற்போது நாம் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதையடுத்து, புதிய தரவு பாதுகாப்பு மசோதா "மிகவும் எளிமையாகவும் நவீனமாகவும்" இருக்கும். மேலும் இந்த மசோதா தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கான உரிமை மற்றும் இந்தியாவில் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவற்றை அங்கீகரிப்பதில் மிகவும் முற்போக்கானதாக இருக்கும்.
இதையடுத்து, புதிய தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இதற்கு முன்னதாக, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, 2021ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப்கள் உள்ளன. அதேபோல், இந்தியாவில் இணையதளமும் திறந்தவெளியாக உள்ளது. இணையத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஜனநாயக நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும்.
இந்தியா 2014 ஆண்டு முதல் செமிகண்டக்டர் துறையில் மிகவும் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. அதற்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் மிகவும் அவசியம். அதேபோல் ஆன்லைன் விளையாட்டு மற்றும் கிரிப்டோ கரன்சி தொடர்பான பிரச்சினைகள் சாமர்த்தியமாக நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையான சூழல் கட்டமைக்கப்பட வேண்டும்" வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
internet open in india central minister rajiv chandrasekar speech