ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி மோகன் பகான் அபார வெற்றி!
ISL Football Series; Mohun Bagan beat Kerala Royals
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முகமதின் எஸ்.சி. - ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகள் மோத உள்ளன.
11-வது இந்தியன் சூப்பர் லீக் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் கொச்சியில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணி முதல் பாதியில் இரு கோல்கள் அடித்து அசத்தியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் மோகன் பகான் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.
மேலும் இதன் காரணமாக அந்த அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது.இதையடுத்து கேரளா அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.அதனை தொடர்ந்து இறுதியில் இந்த ஆட்டத்தை 3-0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி கைப்பற்றி அசத்தியது.
இந்தநிலையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முகமதின் எஸ்.சி. - ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
English Summary
ISL Football Series; Mohun Bagan beat Kerala Royals