சந்திரனை நெருங்கிய சந்திரயான்-3.!! இஸ்ரோ கொடுத்த அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தியது.

புவி வட்டப் பாதையை விட்டு படிப்படியாக கடந்து ஆகஸ்ட் 5ம் தேதி சந்திரனின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்-3 விண்கலம் நுழைந்தது. சந்திரனை சுற்றிவரும் உயரம் கடந்த  ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் குறைக்கப்பட்டது. இதன் மூலம் சந்திராயன்-3 விண்கலம் தற்போது குறைந்தபட்சம் 174 கிலோமீட்டர், அதிகபட்சம் ஆயிரத்து 437 கிலோமீட்டர் என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரனை சுற்றி வருகிறது.

இந்தநிலையில் சந்திரனை சுற்றி வரும் சந்திராயன்-3 விண்கலத்தை 3வது கட்டமாக வட்டப் பாதையின் உயரத்தைக் குறைக்கும் பணி இன்று நடைபெறுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இன்று காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் கட்டளை பிறப்பிக்கப்பட உள்ளது. மேலும் இறுதிக்கட்ட சுற்று வட்டப் பாதை குறைப்புப் பணி நாளை மறுநாள் மேற்கொள்ளப்பட்டு எனவும், இறுதியாக, சந்திரனின் தென்துருவத்தில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை தரையிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO carry out third stage deceleration of Chandrayaan3 spacecraft


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->