நிலவின் துருவப் பகுதி தரைக்கு அடியில் தண்ணீர்... உறுதிப்படுத்திய இஸ்ரோ.!! - Seithipunal
Seithipunal


நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-3 அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்து இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திராயன்-3 விண் களத்தை வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்த விண்கலம் அனுப்பிய விக்ரம் கிரைண்டர் சேகரித்த தகவலை ஆராய்ந்ததில் நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகமுடன் இணைந்து ஆராய்ச்சி செய்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO confirmed water in under moon pole


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->