உலக அரங்கில் புதிய வரலாறு படைத்த இஸ்ரோ!விண்வெளியில் இணைப்புச் சாதனை படைத்த இஸ்ரோ: முதல் முறையாக இரண்டு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி!
ISRO has created a new history in the world ISRO has achieved a record of connection in space for the first time two satellites have successfully connected
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, இன்று மாபெரும் சாதனையொன்றை அடைந்தது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ், விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் பரிசோதனையில் இஸ்ரோ வெற்றி பெற்றது. இந்த சாதனை, இந்தியாவின் பாரதீய அந்தரீக்ஷ் ஸ்டேஷன் திட்டத்திற்கான வழியை திறக்கின்றது.
இஸ்ரோ, 2024 டிசம்பர் 30 அன்று பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் எஸ்டிஎக்ஸ் 01 (சேஸர்) மற்றும் எஸ்டிஎக்ஸ் 02 (டார்கெட்) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. தொடக்கத்தில் இந்நிகழ்ச்சி ஜனவரி 6 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்களால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
நெடிய சவால்கள் முடிவில், இன்றைய திருப்புமுனைச் சாதனையாக இரண்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரோவின் தலைவர் எஸ். சோமநாத் கூறுகையில்,"இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு இது மிக முக்கியமான நாளாகும். விண்வெளியில் இணைப்பு தொழில்நுட்பம், இந்தியாவின் வலிமையையும், முன்னேற்றத்தையும் உலகத்திற்கு காட்டுகிறது. இது நமது தேசத்தின் விண்வெளி கனவுகளை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும்."
இந்நவீன இணைப்பு தொழில்நுட்பம், விண்வெளியில் செயற்கைக்கோள்களை மறு நிர்மாணிக்கவும், டாக் செய்வதற்கும் பயன்படும். இது அந்தரீக்ஷ் ஸ்டேஷன் போன்ற பெரிய திட்டங்களுக்கு அடிப்படை ஆகும்.
இஸ்ரோவின் இந்த வெற்றி, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வரலாற்றுப் பக்கத்தை எழுதியுள்ளது. இது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகளவில் நிலைநாட்டும் என்பது உறுதி.
English Summary
ISRO has created a new history in the world ISRO has achieved a record of connection in space for the first time two satellites have successfully connected