"பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்" இன்று விண்ணில் பாய்கிறது.!
ISRO PSLV C55 rocket launch today
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் தளத்தில் இருந்து சிங்கப்பூரின் டெலியோஸ்-02, லுமிலைட்-4 ஆகிய இரண்டு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டை இன்று பிற்பகல் 2.19 மணி அளவில் விண்ணில் செலுத்துகிறது.
இதில் இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான லுமிலைட்-4 எனப்படும் 16 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளையும், 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-02 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளையும் கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் செலுத்தப்படுகிறது.
மேலும் டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று மத்திய தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
English Summary
ISRO PSLV C55 rocket launch today