ஜாபர் சாதிக் வழக்கு.. தேதியை குறித்த நீதிமன்றம்.. டெல்லியில் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் பிடிபட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அந்த வழக்கில் தொடர்புடைய சதானந்தம், முஜிபுர், முகேஷ், அசோக் குமார் ஆகியோர் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் இத்தகைய சூழலில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் நீதிமன்ற காவல் இன்று முடிவடைய உள்ள நிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஜாபர் சாதிக் சதானந்தம் முஜிபுர் முகேஷ் அசோக் குமார் ஆகிய ஐந்து பேரின் நீதிமன்ற காவாலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜாபர் சாதிக் மீதான குற்றச்சாட்டு குறித்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால் அதன் மீதான விசாரணையும் ஏப்ரல் இருபதாம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை அவரது சகோதரர் சலீம் சந்தித்து பேசி உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JaffarSadiq judicial custody extended April20


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->