ஜாஃபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 6ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில், கடந்த மார்ச் 9ஆம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார் அத்துடன் அவரது கூட்டாளிகள் 5 பேர் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் 5 பேரின் நீதிமன்ற காவலை மே 6 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் போதை பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணை செய்தது. 

விசாரணையின் முடிவில் ஜாபர் சாதிக்கு உள்ளிட்ட ஐந்து பேரிடமும் மூன்று நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JaffarSadiq judicial custody extended until may6


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->