உலக பிரச்சனைகளை தீர்ப்பதில் பங்களிக்கும் நாடாக உலகம் இந்தியாவை பார்க்கிறது - ஜெய்சங்கர் - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையேயான 60 ஆண்டு கால உறவை நினைவுகூறும் வகையில் இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக முதல் முறையாக சைப்ரஸ் வந்தடைந்தார். பின்பு சைப்ரஸின் பிரதிநிதிகள் சபையின் தலைவரான அன்னிதா டெமெட்ரியோவைச் சந்தித்து உக்ரைன் போரினால் ஏற்படும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேசினர்.

இதையடுத்து சைப்ரஸ் தலைநகர் நிகோசியாவில் நடந்த நிகழ்ச்சியில் சைப்ரஸ் வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்பொழுது அவர், இந்தியா தற்பொழுது ஒரு வலிமையான பொருளாதார நாடாக பார்க்கப்படுகிறது என்றும், உலகளாவிய பிரச்சினைகளை தீர்ப்பதற்குப ங்களிக்கும் நாடாக உலகம் இந்தியாவை பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எழுந்து நிற்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும் பொழுது தைரியமாக எழுந்து நிற்கும் நாடாகவும், சுதந்திரமான ஒரு நாடாகவும் விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் மற்றும் சைப்ரஸ் 60 ஆண்டுகால தூதரக உறவுகளை நினைவு கூறும் வகையில் தபால் தலைகள் வெளியிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jaisankar says the world sees india contribute to solve world problems


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->