ஜம்மு காஷ்மீர் துப்பாக்கி சண்டை : பயங்கரவாதி பலி..! - Seithipunal
Seithipunal


இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பாஸ்குச்சான் என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே  துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நசீர் அகமது பட் என்றும், இவர் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

மேலும், பாதுகாப்புப் படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், கொல்லப்பட்ட பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட நபர் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினார் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பாரமுல்லா பகுதியில் நடந்த என்கவுன்டரில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது உடன் தொடர்புடைய இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jammu kashmeer gun fight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->