ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் தேதியில் அதிரடி மாற்றம்!
Jammu Kashmir Haryana Election date change 2024
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி கடந்த 16 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில், ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பதில், 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குரு ஜம்பேஸ்வரரின் அசோஜ் அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு ஹரியானா தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹரியானா வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு பதில் எட்டாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் துளிகள்: ஜம்மு - காஷ்மீர்
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 3.71 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.
தேர்தல் துளிகள்: ஹரியாணா
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மீ இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Jammu Kashmir Haryana Election date change 2024