அமலாக்கத்துறையினர் மீது பரபரப்பு புகார் - அதிரடி காட்டும் ஜார்கண்ட் முதல்வர்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில ஊழல் தொடர்பான பண மோசடியில் ஈடுபட்டதாக அம்மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத் துறை மூத்த அதிகாரிகள் சிலர் மீது முதல்வர் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள எஸ்சி/எஸ்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையானது பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தன்னையும், தனது முழு சமூகத்தையும் துன்புறுத்துவதையும் இழிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக ராஞ்சி மூத்த போலீஸ் சூப்பிரண்டு சந்தன் குமார் சின்ஹா கூறுகையில், “முதலமைச்சரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையின் சில மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், ரூ. 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jarkant CM hemant soren petition against enforcement department


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->