ஐசிசி தலைவராக போட்டியின்றி ஜெய்ஷா தேர்வு!
Jay Shah ICC head
இந்தியாவின் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா, தற்போது ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இரண்டு முறை இருந்து வந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மேலும், கிரெக் பார்க்லே பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். வரும் டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராக ஜெய் ஷா பதவியேற்கவுள்ளார்.
பிசிசிஐ கெளரவ செயலாளராக கடந்த 2019 ஆண்டு அக்டோபர் முதல் ஜெய் ஷா செயல்பட்டு வருகிறார். மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக 2021 ஆண்டு ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டாம் என்று முடிவு செய்ததால் ஜெய் ஷா தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.