மோசடி வழக்கு: ஜார்கண்ட் முதல்வருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!
Jharkhand cm again ED summons
ஜார்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட ஆஜராகவில்லை.
இதனால் அமலாகுதுறை 8 வது முறையாக சம்மன் அனுப்பிய போது ஹேமந்த் சோரன் அமலாக்கதுறை அலுவலகத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த முடியும் என்றால் ஒத்துழைப்பேன் என பதில் தெரிவித்தார்.
அதனை ஏற்ற அமலாக துறையினர் கடந்த வாரம் ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், வருகின்ற 27 முதல் 31ஆம் தேதிக்குள் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து ஹேமந்த் சோரன் கட்சி தொண்டர்களை சந்தித்து, எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். அந்த சதிகளை மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாம் துண்டு துண்டாக்க வேண்டும்.
அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. எப்போதும் உங்களுடன் ஹேமந்த் சோரன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர் கொண்டு மன உறுதியை உயர்த்துவான் என ஆவேசமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Jharkhand cm again ED summons