முதல்வருக்கு பலமுறை அனுப்பப்பட்ட சம்மன்: அதிரடி சோதனையில் இறங்கிய அமலாக்கத்துறை!  - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டவிரோத சுரங்க வழக்கில் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. 

இருப்பினும் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இதுவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. 

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று, ஹேமந்த் சோரனின் பத்திரிக்கை ஆலோசகரான அபிஷேக் பிரசாத் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். 

மேலும் துணை கமிஷனர் வீடு உள்பட12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அமைப்பின் விசாரணையை எதிர்கொள்ள உள்ள ஹேமந்த் சோரன் தனது மனைவியை முதலமைச்சராக்க இருக்கிறார் என பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஹேமந்த் சோரன் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand cm press advisor house ED raids


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->