#BREAKING:: இனி சிக்கன் சாப்பிடாதீங்க.. மாநில அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சலால் கடந்த 5 நாட்களில் 400க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாக கொல்கத்தா ஆய்வகம் உறுதி செய்துள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அரசு கோழி பண்ணையில் கடந்த 5 நாட்களில் 400க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளது. இதனால் உஷாரான ஜார்க்கண்ட் மாநில அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. 

மேலும் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை பொகாரோ மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற கோழி பண்ணைகளுக்கும் பறவை காய்ச்சல் பரவி உள்ளதா என்பது குறித்து அரசு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் பொகாரோ துணை ஆணையர் மக்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ராஞ்சியிலிருந்து கால்நடை பராமரிப்பு துறையினர் இறந்த கோழிகளின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு கொல்கத்தா மற்றும் மத்திய பிரதேச மாநில ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்று இருந்தனர்.

இந்த சோதனையில் அனைத்து கோழிகளும் பறவை காய்ச்சலால் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அரசு கோழி பண்ணைகளில் இரண்டு வகையான கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு இனங்களிலும் கோழிகளின் இறப்பு காணப்படுவதால் அனைத்து கோழி பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand govt adviced to avoid eating chicken


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->