பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் | விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடாமல் காலம் தாழ்த்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். 

அதில், 'சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், சொத்துக்களை ஏலம் விட உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இதற்காக வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடகா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகிய நிலையில், வழக்கறிஞர் நியமிக்கப்படாமல் கர்நாடகா அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதனை அடுத்து கர்நாடக அரசுக்கு எதிராக நரசிம்மமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.

அதில், 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞரை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடகா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி  விசாரணை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JJ Property issue sc case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->