ஜே.பி.நட்டா மனைவியின் கார் அபேஸ்! மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


பா. ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா மனைவியின் கார் திருடு போனதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு டெல்லி கோவிந்தபுரியில், ஜே.பி. நட்டா மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கடந்த மார்ச் 19ஆம் தேதி சர்வீஸ்காக விடப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஜே.பி. நட்டா மனைவின் ஓட்டுநர் மீண்டும் காரை எடுக்க சென்றபோது அங்கிருந்த கார் திருடு போனது தெரிய வந்துள்ளது. 

இதனால் தெற்கு டெல்லி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. 

இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்திருப்பதாவது, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது திருடப்பட்ட கார் குருகிராம் நோக்கி சென்றது தெரியவந்துள்ளது. 

மேலும் டெல்லி புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Nadda wife car stolen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->