"வெளியே சொன்ன, உன் முகத்துல ஆசிட் அடிச்சுடுவேன்"., 2ஆண்டுகளாக காரைக்கால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!
karaikal niravi 15 years school girl abused
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளி மாணவி ஒருவரை முகத்தில் ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டி, பாலியல் தொந்தரவு செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் : காரைக்கால் பகுதியில் நிரவி பகுதி அருகே, 15 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த சிறுமியை மிரட்டி கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அந்த சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற அந்த கொடூரன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.
பாலியல் தொந்தரவு குறித்து வெளியே கூறினாள், முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாக, கொடூரன் கண்ணன் அந்த சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளான்.
கடந்த சில நாட்களுக்குமுன் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவரின் உடல் நிலை மோசமானது. இதுகுறித்து பெற்றோர்கள் அந்த சிறுமியிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த இரண்டு வருடங்களாக அந்த சிறுமிக்கு நடந்த கொடூரம் தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கண்ணன் என்ற அந்த கொடூரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
karaikal niravi 15 years school girl abused