மங்களூர் ரயில் நிலையத்தில் 'குக்கர் பாம்' வைத்து தகர்க்க சதி? கர்நாடக டிஜிபி பரபரப்பு தகவல்!
Karantaka Mangalore Auto Bomb case
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனரும், பயணியும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மூத்த அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஆட்டோவில் இருந்த குக்கரில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மக்கள் அதிக அளவில் கூடும் மங்களூரு ரெயில் நிலையத்துக்கு செல்வதற்காக ஆட்டோவில் சவாரி செய்து உள்ள அந்த பயணியின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக டிஜிபி தெரிவிக்கையில், "இந்த குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல, ஆனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பயங்கரவாத செயல். இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய ஏஜென்சிகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Karantaka Mangalore Auto Bomb case