கடந்த கால பாடங்களில் இருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை - பிரதமர் நரேந்திர மோடி! - Seithipunal
Seithipunal


கடந்த கால பாடங்களில் இருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று, 25வது கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி லாடாக் கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி, கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும், கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக, 4.1 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையான ''ஷின்குன் லா சுரங்கப்பாதை'' திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, "இந்தியாவுக்காக ராணுவ வீரர்கள் செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை கார்கில் போர் வெற்றி தினம் நினைவூட்டுகிறது.

நம் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும், நாம் கடன் பட்டிருக்கிறோம். லடாக், ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் வளர்ச்சியின் பாதையில் வரும் அனைத்து சவால்களையும் இந்தியா முறியடிக்கும்.

இந்தியா மீதான தாக்குதல்கள் இன்றும் மறைமுகமாக தொடர்ந்து வருகிறது. தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவார்கள்.

பயங்கரவாதிகளுக்கு கேட்கும் இடத்திலிருந்து நான் சொல்கிறேன், உங்கள் மோசமான நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது. நமது ராணுவ வீரர்கள் முழு பலத்துடன் அவர்களை ஒடுக்கி, தகுந்த பதிலடி கொடுக்கப்பார்கள்.

ஆகஸ்ட் 5ம் தேதியோடு ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (370-வது சட்டப் பிரிவு) ரத்து செய்யப்பட்டு 5ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. நமது இந்த சொர்க பூமி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வேகமாக நகர்கிறது.

கடந்த கால பாடங்களில் இருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் மற்றும் மறைமுக போர் பங்கேற்புகளில் மட்டும் பாகிஸ்தான் பொருத்திக்கொள்ள முயற்சிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kargil Vijay Diwas Rajat Jayanti PM Modi speech


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->