கடவுளால் கூட பெங்களூருவை சரிசெய்ய முடியாது - சர்ச்சையை கிளப்பிய டி.கே சிவக்குமார்.!
karnataga deputy cm dk sivakumar speech controvercy
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார், "பெங்களூருவை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மாற்ற முடியாது.
கடவுளால் கூட அதைச் செய்ய முடியாது. சரியான திட்டமிடல் மூலம் செயல்கள் நடைபெற்றால் மட்டுமே பிரச்சினைகளை சரி செய்ய முடியும் " என்று தெரிவித்துள்ளார்

அவரது இந்தக் கருத்து, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில், பொருளாதார நிபுணரும், ஆரின் கேபிடல் நிறுவனத்தின் தலைவருமான மோகன்தாஸ் பாய் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:-
"டி.கேசிவகுமார், நீங்கள் எங்கள் அமைச்சராகி 2 ஆண்டுகள் ஆகின்றன! ஒரு வலிமையான அமைச்சராக உங்களை நாங்கள் பாராட்டி வரவேற்றோம். நல்ல நடைபாதைகளுடன் கூடிய சுத்தமான பெங்களூருவை ஏன் விரைவாக உறுதி செய்ய முடியாது? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
karnataga deputy cm dk sivakumar speech controvercy