பதவியை ராஜினாமா செய்கிறாரா கர்நாடகா முதல்வர்? -  பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில்  முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால், கர்நாடக ஆளுநரைக் கண்டித்து இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் எதிர்க்கட்சிகள் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளதாவது, "நான் அமைச்சராக இருந்த போதும் இப்போது முதல்வராக இருக்கும் போதும் தனிப்பட்ட தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது இல்லை. அரசியலில் கட்சிகள் போராட்டம் நடத்துவது இயல்புதான். இதனால் அவர்கள் போராட்டம் நடத்துவது என்றால் நடத்தட்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் எனக்குக் கவலை இல்லை.

நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் நான் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளேன். அது விரைவில் விசாரணைக்கு வருகிறது. அதில் எனக்குச் சாதகமாகவே இடைக்கால நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன். ஆளுநர் எனக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதித்த வழக்கு நிச்சயம் ரத்து செய்யப்படும்” என்றார்.

இதற்கு முன்னதாக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் தல பக்கத்தில், ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் சித்தராமையா ட்வீட் செய்திருந்தார். மேலும், எந்தவொரு தவறும் செய்யாததால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataga governor aprovel cm siddaramaiah posting resighn


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->