பெண்ணை கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் சோமண்ணா சனிக்கிழமை அன்று சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹங்காள கிராமத்திற்கு விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்குவதற்காக சென்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் தனக்கு நிலம் கிடைக்கவில்லை என அமைச்சரிடம் புகார் கூற வந்ததாக கூறப்படுகிறது. புகார் அளிக்க வந்த பெண்ணை போலீசாரும் அமைச்சர் உடன் இருந்தவர்களும் தடுத்துள்ளனர்.

அதனையும் மீறி அமைச்சரிடம் முறையிடச் சென்ற பெண்ணை அமைச்சர் சோமன்னா கன்னத்தில் அறைந்துள்ளார். அவர் அறைந்த பின்னரும் அமைச்சரின் காலில் விழுந்து அந்தப் பெண் கெஞ்சி உள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் சோமன்னா மன்னிப்பு கேட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேபோன்று கடந்த வருடம் கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் மதுசாமி பெண் விவசாயி ஒருவரை பொதுவெளியில் தாக்கினார். கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி சொத்து உரிமைக்காக போராடிய பெண்ணை தகாத வார்த்தையில் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சிக்குள்ளானது. கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதை ஆகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka BJP minister slapped a woman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->