பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கியது கர்நாடக நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா : பாலியல் புகாரில் சிக்கி கைதான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கியது கர்நாடக நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி சென்று விட்டார். 

காவல்துறையினர் வீட்டின் சோதனை செய்து பார்த்தபோது சுமார் 2900 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

கடந்த 27ஆம் தேதி பிர்ஜ்வல் வீடியோ வெளியிட்டு தன்னை இந்த விவகாரத்தில் வேண்டும் என்று சிக்க வைத்துள்ளதாக கூறியிருந்தார். பின்னர் கடந்த மே 30ஆம் தேதி அதிகாலை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிறப்பு போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா ஹசன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு கர்நாடகா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சாட்சிகளை கலக்க முயற்சிக்கக் கூடாது. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும்  ஏன்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka court granted bail to Prajwal Revanna


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->