அதிகாலை திடீரென கொழுந்துவிட்டு எரிந்த வீடு: தூங்கி கொண்டிருந்தவர்களின் கதி? - Seithipunal
Seithipunal


கர்நாடகா, தீர்த்தஹள்ளி அருகே உள்ள அரலசுரளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திர கவுடா (வயது 65). இவரது மனைவி நாகரத்னா (வயது 55). 

இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு ஸ்ரீராம் (வயது 30). பரத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

இவர்கள் பானை வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் இவர்களது வீட்டில் நேற்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இதில் வீடு முழுவதும் வேகமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேரும் தீயில் சிக்கிக் கொண்டு கவுடா, அவரது மனைவி மற்றும் அவரது மூத்த மகன் ஸ்ரீராம் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இளைய மகன் பரத் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு படுகாயம் அடைந்த பரத்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka fire accident family members death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->