ஓலா, உபர், ரேபிடோ ஆட்டோக்களுக்கு தடை விதித்த மாநில அரசு! - Seithipunal
Seithipunal


மூன்று நாட்கள் கெடு விதித்தது கர்நாடக போக்குவரத்து துறை! 

கர்நாடக மாநிலத்தில் இயங்க வரும் ஓலா, உபர், ராபிட்டோ போன்ற ஆன்லைன் ஆட்டோ சேவைகளுக்கு தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. அந்த நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் ஆட்டோ, கார் வாடகை சேவைகளை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து வருவதாக கர்நாடகா போக்குவரத்து துறைக்கு புகார்கள் குவிந்தன. 

இது சம்பந்தமாக சிலர் ட்விட்டர் பக்கத்திலும் அந் நிறுவனங்களை நேரடியாக இணைத்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையோ பதிலோ கிடைக்கவில்லை. கர்நாடக அரசு முதல் இரண்டு கிலோமீட்டருக்கு 30 ரூபாயும் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 13 வாய் வசூலிக்க கட்டண நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆட்டோ சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. தற்பொழுது இந்த ஆன்லைன் ஆட்டோ நிறுவனங்கள் கிலோமீட்டருக்கு இருநூறு ரூபாய் வசூலிப்பதாக கூறப்பட்டது.

இன்னிலையில் கர்நாடக போக்குவரத்து துறை அதிரடியாக "மொபைல் செயலி மூலம் இயங்கும் ஆட்டோ சேவைகளை நிறுத்த வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. அடுத்த மூன்று நாட்களுக்குள் அரசு நினைத்து கட்டணத் தொகையை ஏற்ப ஆன்லைன் ஆட்டோ சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்." என அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Transport Department imposed a three day delay for online auto service


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->