#காஷ்மீர் : பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு.. பாதுகாப்புபடை வீரர் காயம்.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார்கள் சேர்ந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பந்திபோரா மாவட்ட வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

ரேன்ஜி வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும் தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு பாதுகாப்புவீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அப்பகுதியில் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kashmir gunfire terrorist attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->