கேரளா : முதல்வரின் கிறிஸ்துமஸ் விருந்திற்கு ஆளுநரை அழைக்காததற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், இன்று திருவனந்தபுரத்தில் சுற்றுலாத் துறைக்கு சொந்தமாக உள்ள மஸ்கட் விடுதியில் கிறிஸ்துமஸ் விருந்து நடைபெறவுள்ளது. 

இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக, எதிர்க்கட்சிகள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விருந்தில் கேரள மாநிலத்தின் கவர்னர் ஆரீப் முகமது கானுக்கு பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

இதுகுறித்து மாநில அரசு சார்பில், "ஆளுநருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் போன்ற காரணங்களால் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கடந்த 14-ந்தேதி ஆளுநர் ஆரீப் முகமது கான் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் விருந்தை கேரள முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala chief minister arrange chirstmas party governor aarif mukamathu khan not invaited


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->