நாளை தலைப்பு செய்தியே இதான்! வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் 15 மாதங்கள் சிறையில் இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.

செந்தில்பாலாஜிக்கவே கடந்த ஒரு மாதமாக தமிழக அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போனதாக சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்க ஏற்பாடுகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக அமைச்சரவை மற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாயப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதியவர்கள் 4 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக உயர்கல்வி துறை புதியவர் ஒருவருக்கும் (பட்டியல் இனம்), மதுவிலக்கு அல்லது மின்சாரத்துறை செந்தில்பாலாஜிக்கும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவிக்கப்பட 100% வாய்ப்பு உள்ளதாகவும் வெளியாக தகவல் தெரிவிக்கின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Cabinet MK Stalin 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->