பாலியல் பலாத்கார வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ... கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எல்தவுஸ் குன்னப்பிள்ளி. இவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் 11 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய பின்னரே நேற்று ஆஜரானார். காலை முதல் மாலை வரை அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், மீண்டும் விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜராகும்படி கூறியுள்ளனர்.

இந்நிலையில், கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே. சுதாகரன் வெளியிட்ட அறிக்கையில்,

எம்.எல்.ஏ. எல்தவுஸ் அளித்த விளக்கங்களை கட்சி தலைமை ஆய்வு செய்தது. அதில் திருப்தி ஏற்படவில்லை. அவர், தொகுதியில் சட்டசபை உறுப்பினராக பணியாற்ற வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 

இதனை கவனத்தில் கொண்டு, காங்கிரஸ் கமிட்டியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தினசரி விவகாரங்களில் இருந்து 6 மாத காலத்திற்கு கட்சி அவரை சஸ்பெண்டு செய்கிறது. இந்த கால கட்டத்தில் அவரது செயல்பாடுகளை கட்சி உற்றுநோக்கும். அதன்பின்பு அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Congress MLA accused of rape suspended for six months


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->