நாளை முதல் தீவிரப்படுத்தப்படும் ஊரடங்கு கட்டுப்பாடு.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய காலம் முதலே கேரள மாநிலத்தில் பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டில் இருந்தபோது கூட, கேரள மாநிலத்தில் நோய்த்தொற்று பரவல் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. 

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4,694 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நாளை முதல் கேரள மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும், திருமணங்கள், இறுதி சடங்குகளில் சடங்குகளிலும் 50 பேருக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநாடுகள், பொதுக் கூட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலமாகவே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமலுக்கு வர உள்ள இந்த கட்டுப்பாடுகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று, கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala corona lockdown issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->