2 மகன்களை கொலை செய்து கணவன்-மனைவி தற்கொலை! விசாரணையில் வெளிவந்த உண்மை!
Kerala couple sons commit suicide
கேரளா, எர்ணாகுளம் கடமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நிஜோ (வயது 39) இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சில்பா (வயது 29) இவர்களுக்கு ஏய்பன் (வயது 7) அரோன் (வயது 5) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
இவர்கள் வீட்டின் மேல் தளத்தில் வாசித்து வந்தனர். தரைதளத்தில் நிஜோவின் தம்பி மற்றும் தாயார் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நிஜோ மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்று நேற்று காலை வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த நிஜோவின் தாய் அவர்களை பார்க்கச் சென்றார்.
கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தால் கதவை தட்டியுள்ளார். இருப்பினும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்து வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
அப்போது கணவன்-மனைவி இருவரும் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய படி பிணமாக கிடந்துள்ளனர். 2 மகன்களும் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிஜோவின் தாய் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று கணவன்-மனைவி மற்றும் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உடல்களை மீட்டு பரவூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கணவன்-மனைவி இருவரும் இத்தாலிக்கு வேலைக்காக சென்ற போது வேலை மற்றும் சம்பளம் சரியாக கிடைக்காததால் மீண்டும் கேரளாவுக்கு வந்துள்ளனர்.
இதனால் கடன் தொல்லை அதிகமானதால் மகன்கள் இருவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Kerala couple sons commit suicide